Read me first...

Brief of Wellington Cantonment..

Wellington Cantonment is situated three kilometers to the north of Coonoor. The Mettupalayam-Ooty road passes through the Cantonment. The Wellington Cantonment was earlier known as Jakkatalla (or Jacketallah) from the Badaga Village of that name to the north of it. In 1852, Sir Richard Armstrong, the then Commander-in-Chief, recommended that the name should be changed to Wellington in honor of the Iron Duke, who from the first had evinced an... Read more

வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்ட் - சிறு முன்னுரை

வெலிங்டன் கண்டோன்மெண்ட், மலைகளின் அரசியாம் உதகமண்டலத்தின் நுழைவாயிலான குன்னூரின் தெற்கில், மேட்டுப்பாளையம் உதகை சாலையில் முன்றாவது மைல் தூரத்தில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது வெலிங்டன் கண்டொண்டிமண்ட்.

வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதி ஆரம்பத்தில் “ஜெகதளா” என்று அழைக்கப்பட்டது. ஏன் எனில் இந்தப் பகுதியில் நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரிய இனமான படுகர் இன மக்கள் வசித்து வந்ததின் காரணமாக அப் பெயர் பெற்றது. பின் 1852 ம் ஆண்டு முதன்மை படைத் தளபதியான சர் ரிச்சர்ட் ஆம்ஸ்ட்ராங் என்பவர் இப் பகுதியின் பெயரினை ஐரன் டியூக் என்பவரை கெளரவப்படுத்துவதற்காக வெலிங்டன் என்று பெயர் மாற்ற பரிந்துரைத்தார். ஐரன் டியூக் என்பவர் முதன் முதலில் இப்பகுதியில் மருத்துவ இல்லம் ஒன்றை ஏற்படுத்த முயற்சியினை மேற்கொண்டார், அவரின் நினைவினை போற்றுவதற்காக இப்பகுதியினை வெலிங்டன் என அழைத்தார் மேலும் இராணுவ பகுதியான இப் பகுதியினை வெலிங்டன் என பெயர் மாற்றம் செய்யவும் ஆணையிட்டார்.

இப் பகுதியில் போர் வீரர்களின் குடியிருப்புகள் கட்டும் கட்டுமானப்பணி 1852ம் ஆண்டு துவக்கப்பட்டு 1860ம் ஆண்டு முடிவு பெற்றது. அந்த பகுதி பிரபலமான பெயரான “வெலிங்டன் பேரக்ஸ்” என்று அழைக்கப்பட்டது. 1947 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், அந்தப் பகுதி “மெட்ராஸ் ரெஜிமண்டல் சென்டர்” என்று அழைக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் வெலிங்டன் பேரக்ஸ் இந்தியாவின் முதல் கர்னல், ஜெனரல் S.M.ஸ்ரீநாகேஷ் என்பவரின் நினைவாக “ஸ்ரீநாகேஷ் பேரக்ஸ்” என்று அழைக்கப்படுகிறது.

இராணுவ குழயிருப்பில் இருந்து பூர்வீக சந்தைப் பகுதியான, தற்சமயம் கண்டோன்மெண்ட் அங்காடிகள் அமைந்துள்ள பகுதிக்கு செல்ல இப்பகுதியிலுள்ள சிறு ஓடையை கடந்து செல்ல வேண்டும். அந்த ஓடையை கடப்பதற்கு “வாட்டர் லூ” என்ற பாலத்தை கடந்து செல்ல வேண்டும். தற்சமயம் அந்த பாலம் “பிளாக் பிரிட்ஜ்” (கரும்பாலம்) என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. அந்தப் பாலம் தரம் வாய்ந்த மரத்தால் செய்யப்பட்டது. 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த பாலம் சிறப்பாக பதுப்பிக்கப்பட்டு இந்தியாவின் பீல்டு மார்சல் மானெக்ஷாவின் நினைவினை போற்றும் வகையில் அந்தப் பாலம் “மானெக்ஷா பாலம்” என்று அழைக்கப்படுகிறது.

இப் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த புனித ஜார்ஜ் தேவாலயம் மற்றும் புனித ஜோசப் தேவாலயம் முறையே 1885 மற்றும் 1888ம் ஆண்டுகளில் Maj.Morant மற்றும் R.E ஆகியோர்கள் வடிவமைத்து அதனை கட்டி முடித்தார்கள்.

இப்பகுதியின் மிக முக்கிய அங்கமான பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் “இராணுவ பணியாளர்கள் கல்லூரி” இப்பகுதியில் அமைந்துள்ளது இப்பகுதியின் கூடுதல் சிறப்பாகும். இந்த கல்லூரி 1947ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரி மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரில் உள்ள போர் வீரர்களின் நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ள இடத்திற்கு எதிர்பறம் அமைந்துள்ளது.

வெலிங்டன் கண்டோன்மெண்ட் இரண்டாம் நிலை கண்டோன்மெண்ட் ஆகும். இங்கு சுமார் 20,000 மக்கள் வசிக்கின்றனார். கண்டோன்மெண்ட் போர்ட் வெலிங்டன் மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு 12 கிமீ தொலைவிற்கு முன்னதாக அமைந்துள்ளது. இது உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தலம், நீலகிரி மலையின் மிக முக்கியமான பகுதி, இந்த உதகை பகுதியை சுற்றிலும் பசுமையை பரப்பிய தேயிலைத் தோட்டங்களும், ரம்மியமான காலநிலையும் உதகையின் தனி அடையாளங்கள் ஆகும். மேலும் உதகையினை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களான முதுமலை தேசிய பூங்கா, உதகை தாவரவியல் பூங்கா, தொட்டபட்டா மலை சிகரம், கல்லட்டி நீர்வீழ்ச்சி, பைக்காரா ஏரி, உதகை ஏரி போன்றவை வெலிங்டன் கண்டோன்மெண்ட் போர்ட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ள பகுதிகளாகும்.

இராணுவ பணியாளர்கள் கல்லூரி:
இராணுவ பணியாளர்கள் கல்லூரி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ளது. இக் கல்லூரியில் இராணுவ அதிகாரிகள் குறிப்பாக முப்படைகளான இராணுவம், விமானப்படை, கப்பல் படை போன்ற துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. மேலும் இத்துறைகளை தவிர்த்து ஏனைய தகுதி வாய்ந்த குடிமக்களுக்கும் மேலும் வெளி நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் நட்பு ரீதியாகவம் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

மானெக்ஷா பாலம்:
1878ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் உதகை குன்னூர் சாலையில் வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ளது. முதலில் இந்த பாலம் மைனலா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது, இது முதலில் தரமான பர்மா தேக்கு மரத்தால் உருவாக்கப்பட்டது. மேலும் அந்த மரத்திற்கு கருப்பு நிறம் பூசப்பட்டு இருந்ததினால் இது பொதுவாக “பிளாக் பிரிட்ஜ்” என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாலம் 43.5 மீ நீளமுடையது.

நீலகிரி மலை ரயில்:
மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ரயில் பாதை 1854ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டு ஏறத்தாழ 45 ஆண்டுகள் கழித்து 1899 ம் ஆண்டு தான் முதன் முதலில் இந்த பாதையில் புகை வண்டி இயக்கப்பட்டது. இந்தப் பாதையில் இயக்கப்பட்ட இந்த ரயில் வண்டி மணிக்கு 10.4 கிமீ வேகத்தில் தான் இயக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிகவும் குறைந்த வேகத்தில் சென்ற புகை வண்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

19ம் நுற்றாண்டின் பிற்பகுதியில் இந்த ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டுஅதன் படி இந்தப் பாதை ஒன்றுக்கு 12 என்ற அளவில் சாய்வாக்கப்பட்டது. மேலும் 208 வளைவுகளும் 13 குகைகளும் உருவாக்கப்பட்டது. நீலகிரி மலை ரயில் என்ற அமைப்பு இந்திய ரயில்வேயில் குறிப்பாக தமிழகத்தில் 1908ம் ஆண்டு பிரிட்டிஷ் காரர்களால் உருவாக்கப்பட்டது. 2005ம் ஆண்டு “யுனெஸ்கோ” நிறுவனத்தால் உலக பாரம்பாரியங்களுல் ஒன்றான டார்ஜிலிங் மலை ரயிலுக்கு அடுத்தபடியாக இந்த நீலகிரி மலை ரயிலும் சேர்க்கப்பட்டது. அதன் பின் இந்த ரயில் “இந்திய மலை ரயில்வே” என்று அழைக்கப்பட்டது. 1854 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலைரயில்வே திட்டத்தின் படி ரயில் பாதையின் நீளம் 41.8 கிமீ தொலைவும், 108 வளைவுகளும், 16 குகைகளும் மற்றும் 250 பாலங்களுமாக உருவாக்க திட்டமிடப்பட்டது. ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப்பின் 1989ம் ஆண்டு முதல் பொதுமக்கள் உபயோகத்திற்கு இந்த ரயில் பயன்படுத்தப்பட்டது தற்சமயம் இந்த ரயில் பாதை 45.88 கி மீ தூரம் உள்ளடக்கிய இந்தப் பாதை மேட்டுப்பாளையத்தையும் உதகையையும் இணைக்கின்றது.